20 Apr 2022

150W சார்ஜிங் வசதியுடன் அடுத்த வாரம் இந்தியா வரும் புது ரியல்மி ஸ்மார்ட்போன்!




ரியல்மி நிறுவனம் தனது புதிய GT Neo3 ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

ரியல்மி GT Neo3 ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 29 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என ரியல்மி நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய தகவலை ரியல்மி இந்தியா சி.இ.ஒ. மாதவ் சேத் யூடியூபில் “AskMadhav” நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது தெரிவித்தார். 

இத்துடன் 150W சார்ஜிங் கொண்ட GT Neo3 மாடலும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இதன் காரணமாக ரியல்மி நிறுவனம் GT Neo3 ஸ்மார்ட்போனின் 80W மற்றும் 150W என இரண்டு வேரியண்ட்களும் அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகி விட்டது. 

ரியல்மி GT Neo3 அம்சங்கள்:

- 6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
- ஆக்டா கோரா மீடியாடெக் டிமென்சிட்டி 8100 5nm பிராசஸர்
- மாலி-G510 MC6 GPU
- 6GB / 8GB LPDDR5 ரேம், 128GB (UFS 3.1) மெமரி
- 8GB / 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் ரியல்மி யு.ஐ. 3.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, OIS, f/1.88, LED ஃபிளாஷ்
- 8MP 119° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.25
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.45
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ 
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி, 80W சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங்
- 4500mAh பேட்டரி, 150W அல்ட்ரா டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் 
Share:

17 Nov 2021

ஏர்டெல், ஜியோ: தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

 



ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் தொடர்ந்து சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். 

குறிப்பாக ஜியோ நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான திட்டங்களை வைத்துள்ளது. அதேபோல் ஏர்டெல் நிறுவனமும் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிகமான சலுகைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



குறிப்பாக இந்த இரண்டு நிறுவனங்களும் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் 2ஜிபி ப்ரீப்பெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்



ஜியோ நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். 

அதேபோல் இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தாஉள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.

ஜியோ ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்



ஜியோ நிறுவனத்தின் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். 

மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தா உள்ளிட்ட பல சிறப்பானநன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம்



ஜியோ நிறுவனத்தின் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். 

இதுதவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்ட பல சலுகைகள் இந்த திட்டத்தில்கிடைக்கும்.

ஜியோ ரூ.444 ப்ரீபெய்ட் திட்டம்



ஜியோவின் ரூ.444-ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் பல்வேறு சிறப்பான நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஜியோ ரூ.888 ப்ரீபெய்ட் திட்டம்



ஜியோ நிறுவனத்தின் ரூ.888 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். 

இதுதவிர வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தனிசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்ட பல சலுகைகள் இந்த திட்டத்தில்கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம்



ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளன.

ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்



ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்றஅழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், FASTag ரீசார்ஜில் ரூ.100 கேஷ்பேக், Wynk மியூசிக்கிற்கான இலவச அணுகல், இலவச ஹலோ ட்யூன்ஸ்உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.698 ப்ரீபெய்ட் திட்டம்



ஏர்டெல் ரூ.698 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின்வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். 

மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பிரைம் வீடியோ மொபைல் எடிஷனுக்கான ஒரு மாத ஃப்ரீ ட்ரையல், FASTag ரீசார்ஜில் ரூ.100 கேஷ்பேக், Wynk மியூசிக்கிற்கான இலவச அணுகல், இலவச ஹலோ ட்யூன்ஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்



ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின்வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். 

மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச அணுகல், FASTag ரீசார்ஜில் ரூ.100 கேஷ்பேக், Wynk மியூசிக்கிற்கான இலவச அணுகல், இலவச ஹலோ ட்யூன்ஸ் உள்ளிட்ட பல்வேறு
நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.


Share:

12 Nov 2021

வாட்ஸ்அப் இல் களமிறங்க தயாராகும் அடுத்த சிறப்பம்சங்கள் இவை தானா?

 

மெட்டாவுக்குச் சொந்தமான உடனடி செய்தியிடல் தளமான வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு பல புதிய அம்சங்களை வெளியிடும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.



இந்த அம்சங்கள் பயன்பாட்டின் நிலையான பதிப்பிற்கு வெளிவருவதற்கு முன், ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா என்பதை கண்டறிய அதன் பீட்டா பதிப்புகளில் சோதனை செய்கிறது. 

அதேபோல், WABetaInfo என்ற டிராக்கர் தளமானது, செயலியில் சோதனையில் உள்ள புதிய அம்சங்களைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் இல் களமிறங்க தயாராகும் புதிய அம்சங்கள்



சமீபத்திய அறிக்கையின்படி, உடனடி செய்தியிடல் இயங்குதளமானது புதிய UI, இயல்புநிலை செய்தி டைமர் மற்றும் பல சாதன ஆதரவு தொடர்பான மாற்றங்கள் ஆகியவற்றில் செயல்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. 

மல்டி டிவைஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் புதிய அம்சங்கள் சோதனையில் உள்ளன
அறிக்கையின்படி, இந்த புதிய அம்சங்கள் Android சாதனத்திற்கான WhatsApp இன் சமீபத்திய பீட்டா பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

90 நாட்கள் மற்றும் 24 மணிநேரம் போன்ற விருப்பங்கள்



டிஃபால்ட் மெசேஜ் டைமரைப் பற்றி பேசுகையில், disappearing messages தானாக இயக்கப்பட்டதன் மூலம் புதிய அரட்டை இழைகளைத் தொடங்க இது உங்களை அனுமதிக்கிறது . மேலும், அதிக நபர்களுக்கு இயல்புநிலை செய்தி டைமரை இயக்கும் திறனை இது வெளியிடுகிறது. 

இந்த இயல்புநிலை செய்தி டைமரை தனியுரிமை அமைப்புகளின் கீழ் மாற்றலாம். 90 நாட்கள் மற்றும் 24 மணிநேரம் போன்ற விருப்பங்களுடன் தொடர்புகளுக்கு இயல்புநிலை செய்தி டைமரை நீங்கள் இயக்கலாம் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.21.23.10



மேலும், உடனடி செய்தியிடல் பயன்பாடு அதன் பயன்பாட்டின் பீட்டா பதிப்பிற்கான புதிய UI ஐ வெளியிடுகிறது, இது தொடர்புத் தகவலை வேறு முறையில் நிறுவனம் காண்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 

கடைசியாக, வாட்ஸ்அப் பல சாதன ஆதரவு தொடர்பான மாற்றத்தைத் தயார்படுத்துகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.21.23.10 பயன்பாட்டில் மாற்றங்களுடன் காணப்பட்டது.

பீட்டா திட்டத்தில் சேராத பீட்டா சோதனையாளர்கள்



அதே போல், இணைக்கப்பட்ட சாதனத்தை மாற்றும் ஒவ்வொரு முறையும் பாதுகாப்புக் குறியீடு புதுப்பிக்கப்படும்போது, ​​அறிவிப்புகளை அனுப்புவதை ஆப்ஸ் நிறுத்திவிடும். இருப்பினும், பல சாதனத் திட்டத்திலிருந்து விலக WhatsApp உங்களை அனுமதிக்காது. 

பல சாதன பீட்டாவிலிருந்து விலகுவதற்கான விருப்பத்தை ஆப்ஸ் அகற்றி வருவதாகவும், இந்த பீட்டா திட்டத்தில் சேராத பீட்டா சோதனையாளர்கள் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த சாதனங்களை மீண்டும் இணைக்கப்படுமா?



இந்த அம்சத்தின் நிலையான பதிப்பை ஆப்ஸ் இன்னும் வெளியிடவில்லை, ஆனால் சில பீட்டா சோதனையாளர்களுக்கு இது தானாகவே இயக்கப்படும். 

இந்த புதுப்பிப்பு இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களையும் வெளியேற்றியது மற்றும் கணக்கிற்கு தானாக இயக்கப்பட்ட பல சாதன ஆதரவைப் பயன்படுத்தி இந்த சாதனங்களை மீண்டும் இணைக்கலாம் என்று அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் 2.2 மில்லியன் யூசர்களின் அக்கவுண்ட்கள் நீக்கம்



சமீபத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் 2.2 மில்லியன் யூசர்களின் அக்கவுண்ட்களை நீக்கியது. அதற்கான என்ன என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் சிலர் போலியான செய்திகளை பரப்பி வருகின்றனர். 

பின்பு இதை உண்மை என நம்பி பல்வேறு மக்கள் அப்படியே ஷேர் செய்து வருகின்றனர். எனவே இந்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் தளங்களில் போலி தகவல்களை பரப்பி வருவதற்கு தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படுகின்றன.

2.2 மில்லியன் அக்கவுண்ட்கள் முடக்கம்



அதிலும் வாட்ஸ்அப்பில் போலி அக்கவுண்ட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று தான் கூறவேண்டும். இந்த வகை போலி அக்கவுண்ட்களை கொண்டு மக்கள் மத்தியில் தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. 

இதுபோன்ற போலி அக்கவுண்ட்களை அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 2.2 மில்லியன் வாட்ஸ்அப் யூசர்களின் அக்கவுண்ட்களை முடக்கி உள்ளது. 

அதாவது இந்த அக்கவுண்ட்கள் அனைத்தும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் விதிகளை மீறியதால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share:

11 Nov 2021

ரூ. 399 விலையில் கிடைக்கும் புதிய பவர் பேங்க்கள்.. இது வேற லெவல் சலுகை.. மிஸ் பண்ணிடாதீர்கள்..

 

பட்ஜெட் விலையை விட குறைவான விலையில் தரமான பவர் பேங்க் சாதனம் வாங்க ஆசையா? அப்போ இந்த பதிவு உங்களுக்கானது தான்.



இப்போது நடைபெறும், அமேசான் தினசரி சிறப்பு சலுகை விற்பனையின் கீழ் உங்களுக்கு மிகவும் மலிவான விலையில் புதிய பவர் பேங்க் சாதனம் வாங்க வாய்ப்புள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், வெறும் ரூ. 399 விலை முதல் இந்த சலுகையில் கீழ் உங்களுக்கு பவர் பேங்க் சாதனம் வாங்கக் கிடைக்கிறது.



உங்களிடம் அதிகபட்சமாக வெறும் ரூ. 649 மட்டும் இருந்தால் போதும், அதிக சக்தியுடன் கூடிய பவர் பேங்க் சாதனத்தை வாங்கலாம்.

1. URBN 10000 mAh Li-Polymer Ultra Compact Power Bank



இந்த பவர் பேங்க் சாதனம் 12W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது ஒரு இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது 3000mAh கொண்ட ஃபோன் பேட்டரியை 2.4 மடங்கு வரை சார்ஜ் செய்யும். 

அதேபோல் 4000mAh ஃபோன் பேட்டரியை 1.8 மடங்கு வரை சார்ஜ் செய்யும். இதன் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இப்போது சலுகையில் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 649 விலையில் கிடைக்கிறது.

2. URBN 10000 mAh Li-Polymer Ultra Compact Power Bank (Purple)



இந்த பவர் பேங்க் சாதனம் 12W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது ஒரு இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது 3000mAh கொண்ட ஃபோன் பேட்டரியை 2.4 மடங்கு வரை சார்ஜ் செய்யும். அதேபோல் 4000mAh ஃபோன் பேட்டரியை 1.8 மடங்கு வரை சார்ஜ் செய்யும். 

இதன் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இப்போது சலுகையில் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 649 விலையில் கிடைக்கிறது. பர்பிள் நிறத்தை விரும்புபவர்கள் இந்த பவர் பேங்க் சாதனத்தை வாங்கலாம்.

3. URBN 10000 mAh Li-Polymer Ultra Compact Power Bank (Bright Blue)



இந்த பவர் பேங்க் சாதனம் 12W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது ஒரு இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது 3000mAh கொண்ட ஃபோன் பேட்டரியை 2.4 மடங்கு வரை சார்ஜ் செய்யும். 

அதேபோல் 4000mAh ஃபோன் பேட்டரியை 1.8 மடங்கு வரை சார்ஜ் செய்யும். இதன் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இப்போது சலுகையில் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 649 விலையில் கிடைக்கிறது. நிலா நிறத்தை விரும்புபவர்கள் இந்த சாதனத்தை வாங்கலாம்.

4. URBN 10000mAh Li-Polymer Ultra Compact Type-C Power Bank



இந்த பவர் பேங்க் சாதனம் 12W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது ஒரு இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது 3000mAh கொண்ட ஃபோன் பேட்டரியை 2.4 மடங்கு வரை சார்ஜ் செய்யும். அதேபோல் 4000mAh ஃபோன் பேட்டரியை 1.8 மடங்கு வரை சார்ஜ் செய்யும். 

இதன் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இப்போது சலுகையில் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 549 விலையில் கிடைக்கிறது. கருப்பு நிறத்தை விரும்புபவர்கள் இந்த சாதனத்தை வாங்கலாம். இது டைப் சி போர்ட் அம்சத்துடன் வருகிறது.

5. Candytech 10000 mAh Slim Fast Charging Powerbank



இந்த பவர் பேங்க் சாதனம் Qi சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது ஒரு இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது 3000mAh கொண்ட ஃபோன் பேட்டரியை 2.4 மடங்கு வரை சார்ஜ் செய்யும். 

அதேபோல் 4000mAh ஃபோன் பேட்டரியை 1.8 மடங்கு வரை சார்ஜ் செய்யும். இதன் அசல் விலை ரூ. 1,399 ஆகும். இப்போது சலுகையில் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 399 விலையில் கிடைக்கிறது. 

கருப்பு நிறத்தை விரும்புபவர்கள் இந்த சாதனத்தை வாங்கலாம். இது டைப் சி போர்ட் அம்சத்துடன் வருகிறது.



மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த சாதனத்தை நீங்கள் வாங்க நினைத்தாள், சலுகை நிறைவடைவதற்குள் உங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

இதேபோல், இன்னும் பல பொருட்களுக்கு ஏராளமான சலுகை மற்றும் தள்ளுபடிகள் இப்போது கிடைக்கிறது. ஸ்மார்ட் வாட்ச்கள் மட்டுமின்றி, ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், எலெக்ட்ரோனிஸ் சாதனங்கள் மற்றும் வீடு உபயோக பொருட்கள் மீதும் சலுகைகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share:

23 Oct 2021

நவம்பர் 1 முதல் இந்த போன்களில் வாட்ஸ்அப் இயங்காது.. இதில் உங்க போன் இருக்கா? செக் பண்ணுங்க..


 பேஸ்புக்கிற்கு சொந்தமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் நவம்பர் 1 ஆம் தேதி முதல் பல ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யாது என்ற தகவலை நிறுவனம் தற்பொழுது வெளிப்படுத்தியுள்ளது. 



இதன்படி, நிறுவனம் தெரிவித்துள்ளபடி இன்னும் 10 நாட்களுக்குள் குறிப்பிட்ட சில ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ்அப் தடை செய்யப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கான காரணம் மற்றும் எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது என்று பார்க்கலாம்.

என்ன? நவம்பர் 1 முதல் வாட்ஸ்அப் இந்த போன்களில் எல்லாம் செயல்படாதா?



வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயல்படாவிட்டால், உங்கள் பழைய ஸ்மார்ட்போன்களில் இருந்து நீங்கள், உங்களின் வாட்ஸ்அப் காண்டாக்ட் நண்பர்களுக்கு எந்தவித மெசேஜ்களையும் அனுப்ப முடியாது. 

அதேபோல், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பவோ பார்க்கவோ முடியாது என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் வாட்ஸ்அப் ஐஓஎஸ் பயனர்களின் கவனத்திற்கு



வாட்ஸ்அப் நிறுவனம் அதன் அறிவிப்பில், வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் வாட்ஸ்அப் ஐஓஎஸ் இரண்டின் பழைய பதிப்புகள் இனி வாட்ஸ்அப் சேவையை ஆதரிக்காது என்று நிறுவனம் கூறியுள்ளது. 

இதன்படி, ஆண்ட்ராய்டு ஓஎஸ் 4.1 மற்றும் அதற்கு மேல் ஆதரிக்கும் ஸ்மார்ட்போன் உள்ளவர்கள் மட்டும் இனி வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியும். அதேபோல், ஐஓஎஸ் 10 மற்றும் அதற்கு மேல் உள்ள பயனர்கள் மட்டுமே இனி வாட்ஸ்அப் மெசேஜிங் செயலியைப் பயன்படுத்த முடியும்.

உங்கள் ஸ்மார்ட்போன் எந்த ஓஎஸ் பதிப்பில் இயங்குகிறது?



மேலே குறிப்பிட்டுள்ள ஓஎஸ் பாதிப்புகளை விட குறைந்த பதிப்புகளில் செயல்படும் எந்த ஸ்மார்ட்போனிலும் இனி வாட்ஸ்அப் செயலி இயங்காது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

உங்கள் ஸ்மார்ட்போன் எந்த வெர்ஷன் ஓஎஸ் உடன் இயங்குகிறது என்பதை அறிந்துகொள்ள, உங்கள் மொபைல் செட்டிங்ஸ் இல் உள்ள சாப்ட்வேர் அப்டேட் விருப்பத்தை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம். 

இத்துடன் நிறுவனம், நவம்பர் 1 முதல் வாட்ஸ்அப் இயங்காத ஸ்மார்ட்போனின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதை இப்போது பார்க்கலாம்.

இந்த போன்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது.. பட்டியலை செக் பண்ணுங்க..



நவம்பர் 1 ஆம் தேதி முதல் அந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்ற ஸ்மார்ட்போன்களின் முழுமையான பட்டியல் இதோ.

ஆப்பிள்
  • ஐபோன் 6 எஸ் (iPhone 6S)
  • ஐபோன் 6 எஸ் பிளஸ் (iPhone 6S Plus)
  • ஆப்பிள் ஐபோன் எஸ்இ SE (Apple iPhone SE)

சாம்சங்


  • சாம்சங் கேலக்ஸி ட்ரெண்ட் லைட் (Samsung Galaxy Trend Lite)
  • கேலக்ஸி SII (Galaxy SII)
  • கேலக்ஸி ட்ரெண்ட் II (Galaxy Trend II)
  • கேலக்ஸி எஸ் 3 மினி (Galaxy S3 mini)
  • கேலக்ஸி கோர் (Galaxy Core)
  • கேலக்ஸி எக்ஸ் கவர் 2 (Galaxy Xcover 2)
  • கேலக்ஸி ஏஸ் 2 (Galaxy Ace 2)

எல்ஜி


  • எல்ஜி லூசிட் 2 (LG Lucid 2)
  • ஆப்டிமஸ் எல் 5 டூயல் (Optimus L5 Dual)
  • ஆப்டிமஸ் L4 II டூயல் (Optimus L4 II Dual)
  • ஆப்டிமஸ் F3Q (Optimus F3Q)
  • ஆப்டிமஸ் F7 (Optimus F7)
  • ஆப்டிமஸ் F5 (Optimus F5)
  • ஆப்டிமஸ் L3 II Dual (Optimus L3 II Dual)
  • ஆப்டிமஸ் F5 (Optimus F5)
  • ஆப்டிமஸ் L5 (Optimus L5)
  • ஆப்டிமஸ் L5 II (Optimus L5 II)

எல்ஜி இல் இத்தனை போன்களா?


  • ஆப்டிமஸ் L3 II (Optimus L3 II)
  • ஆப்டிமஸ் L7 (Optimus L7)
  • ஆப்டிமஸ் L7 II Dual (Optimus L7 II Dual)
  • ஆப்டிமஸ் L7 II (Optimus L7 II)
  • ஆப்டிமஸ் F6 (Optimus F6)
  • எனக்ட் (Enact)
  • ஆப்டிமஸ் F3 (Optimus F3)
  • ஆப்டிமஸ் L4 II (Optimus L4 II)
  • ஆப்டிமஸ் L2 II (Optimus L2 I)
  • ஆப்டிமஸ் நைட்ரோ எச்டி மற்றும் 4 எக்ஸ் எச்டி (Optimus Nitro HD and 4X HD)

ZTE போன்கள்
  • ZTE கிராண்ட் எஸ் ஃப்ளெக்ஸ் (ZTE Grand S Flex)
  • கிராண்ட் எக்ஸ் குவாட் வி 987 (Grand X Quad V987)
  • ZTE V956 (ZTE V956)
  • கிராண்ட் மெமோ (Grand Memo)

ஹுவாய் போன்கள்


  • ஹுவாய் அஸெண்ட் ஜி740 (Huawei Ascend G740)
  • அஸெண்ட் டி குவாட் எக்ஸ்எல் (Ascend D Quad XL)
  • அஸெண்ட் மேட் (Ascend Mate)
  • அஸெண்ட் P1 S (Ascend P1 S)
  • அஸெண்ட் D2 (Ascend D2)
  • அஸெண்ட் டி 1 குவாட் எக்ஸ்எல் (Ascend D1 Quad XL)

இதற்கான தீர்வு அல்லது மாற்று வழி ஏதேனும் உள்ளதா?



இந்த ஸ்மார்ட்போன்களை வைத்துள்ள பயனர்களுக்கு இனி நவம்பர் 1 ஆம் தேதி முதல் முற்றிலுமாக வாட்ஸ்அப் இயங்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான தீர்வு அல்லது மாற்று வழி ஏதேனும் உள்ளதா என்ற கேள்வியைக் கேட்கும் நபர்களுக்கு, நீங்கள் உங்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து புதிய போனை மாற்றுவது மட்டும் தான் ஒரே வெளியாக இருக்கும், ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் iOS அப்டேட் இனி கிடைக்காது என்பதனால் வாட்ஸ்அப் பயனர்கள் அவர்களின் சேவையை தொடரமுடியாது.


Share:

20 Oct 2021

இந்தியர்களே தயாரா?- உச்ச அம்சங்களுடன் இந்திய தயாரிப்பு ப்ளூடூத் இயர்பட்ஸ்: விலை குறைவுதான்!

 

லாவா ப்ரோ பட்ஸ் என்1 இயர்போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.



இவை இரட்டை இணைப்பு, விரைவான சார்ஜிங் மற்றும் கிங்-சைஸ் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. லாவா ப்ரோ பட்ஸ் என்1 வயர்லெஸ் இயர்போன்கள் ரூ.1499-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதல் நெக் பேண்ட் வயர்லெஸ் இயர்போன்கள்



லாவா தனது முதல் நெக் பேண்ட் வயர்லெஸ் இயர்போன்களை லாவா ப்ரோபட்ஸ் என் 1 என அறிமுகம் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்த இயர்போன்கள் விலை ரூ.1499 ஆக இருக்கிறது. 

இந்த சாதனம் வாங்க விரும்புபவர்கள் லாவா இஸ்டோர் மற்றும் அமேசான் மூலம் வாங்கலாம். பெர்ரி நீலம் மற்றும் சார்கோல் சாம்பல் வண்ண விருப்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மெட்டல் பேண்ட் ஆனது சிலிக்கான் மற்றும் மெட்டல் கலவையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரோ பட்ஸ் என்1 இரட்டை இணைப்பு, விரைவான சார்ஜிங் மற்றும் கிங் சைஸ் அளவிலான பேட்டரி உள்ளிட்ட அம்சங்களோடு வருகிறது.

லாவா ப்ரோ பட்ஸ் என்1 அம்சங்கள்



லாவா ப்ரோ பட்ஸ் என்1 அம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த சாதனம் 220 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. 

இந்த சாதனம் 30 மணிநேர மியூசிக் ப்ளே டைம் மற்றும் 200 மணி நேர காத்திருப்பு நேரத்துடன் வருகிறது. இது 20 நிமிட சார்ஜிங்கிற்கு பிறகு எட்டு மணிநேர பின்னணி நேரத்தை வழங்குகிறது. விரைவான சார்ஜிங் அம்சத்துடன் இந்த சாதனம் வருகிறது.

இரண்டு சாதனங்களுடன் இணைக்க அனுமதி



ப்ரோ பட்ஸ் என்1 இரட்டை அம்சமானது ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைக்க அனுமதிக்கிறது. மல்டி டாஸ்க் செய்ய விரும்பும் பயனர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர்களுடன் இயர்போன்களை அடிக்கடி பகிர்ந்து கொள்ளலாம். 

இதன் இரட்டை இணைப்பு அம்சமானது பெரிதளவு பயனுள்ளதாக இருக்கிறது. இரண்டு 10 மிமீ டிரைவர்கள் இலகுரக இயர்போன்களை இயக்குகின்றன. மேம்பட்ட பாஸ் திறனுடன் சிறந்த ஒலி தரத்தை வழங்குவதாக கூறப்படுகிறது. இணைப்பு முன்னணியில் ப்ளூடூத் பதிப்பு 5.0 மூலம் ஆதரிக்கின்றன.

ஸ்லைடர் சுவட்ச் ஆதரவு



ப்ரோ பட்ஸ் என்1 இலகுரக ஆதரவோடு பயனரின் கழுத்தில் வசதியாக உட்காரும் வகையில் வருகிறது. இயர்போன்கள் பயன்பாட்டில் இல்லாதபோது அணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவதற்கா பிரத்யேக ஸ்லைடர் சுவட்சையும் கொண்டிருக்கிறது. 

பயனரின் அதிகபட்ச வசதியை உறுதி செய்ய ஒவ்வொரு காது விளிம்புக்கும் பொருந்தும் வகையில் நெக் பேண்ட் முழுமையான ஆதரவோடு வருகிறது. அதன் காதில் பொருந்தும் அம்சம் ஆனது காதுகள் வலிக்காத அளவிற்கு பொருத்தமான வசதியை வழங்குகிறது. 

இயர்போன்கள் நீர் மற்றும் வியர்வையை எதிர்க்கும் அம்சத்தோடு வருகிறது. இது பயணம், ஒர்க்-அவுட் போன்ற எந்த பயன்பாட்டிற்கும் ஏகுவான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5G தொழில்நுட்ப ஆதரவு



ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள் சமீபத்தில் 5G ஸ்மார்ட்போன்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன, இந்தியாவில் 5G தொழில்நுட்பத்தின் சரியான வெளியீடு எப்போது என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. 

சாம்சங், ஆப்பிள் அல்லது பட்ஜெட் பிராண்டு என்று எதுவாக இருந்தாலும், அனைத்து பிராண்டுகளும் அதன் சொந்த 5 ஜி சாதனங்களைத் தயார் செய்து வருகின்றது. மேலும், மற்றொரு பட்ஜெட் பிளேயர் இந்த கூட்டத்தில் சேரத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

ரூ.20,000 க்கு கீழ் ஸ்மார்ட்போன்கள்



லாவா இன்டர்நேஷனலின் மூத்த நிறுவன அதிகாரி புதன்கிழமை தனது முதல் 5 ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தின் தோற்றத்தைக் காட்சிப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக வெளிப்படுத்தினார், இதன் விலை ரூ.20,000 க்கு கீழ் இருக்கும் என்று கூறியுள்ளார். 

வெறும் ரூ. 20,000 விலைக்குள் 5ஜி சாதனம் கிடைக்கவிருக்கும் தகவல் தற்பொழுது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. லாவா நிறுவனம் திட்டமிடப்பட்ட படி, இந்த சாதனம் தீபாவளியின் போது அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.


Share:

16 Oct 2021

அமேசான் சிறப்பு விற்பனை: அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

 

அமேசான் வலைத்தளத்தை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். 



குறிப்பாக இந்த தளத்தில் தினசரி ஏதாவது ஒரு சாதனத்திற்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளது. அதேபோல் தற்போது ஒரு சில லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட சாதனங்கள் சலுகை விலையில் கிடைக்கிறது.

மேலும் அமேசான் தளத்தில் அசத்தலான ரெட்மி, சாம்சங் நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பட்டுள்ளது. 

இப்போது விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.



ரெட்மி நோட் 10எஸ்

ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.16,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு சலுகையின் மூலம் இந்த சாதனத்தை ரூ.13,999-விலையில் வாங்க முடியும். 

மேலும் 6.43 இன்ச் FHD + AMOLED பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே, மீடியா டெக் ஹீலியோ ஜி 95 ஆக்டோ-கோர் சிப்செட், 5,000 எம்ஏஎச் பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அமசங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன். 



இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா +
8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெட்மி 9 பவர்



ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.13,999-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரூ.10,999-விலையில் வாங்க முடியும். 

மேலும் ரெட்மி 9 பவர் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. அதேபோல் பாதுகாப்பு வசதிக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஸ்னாப்டிராகன் 662 செயலி, 6000 எம்ஏஎச் பேட்டரி,18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். 



ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை பொருத்தவரை இதன் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இருக்கிறது. இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. 

முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 9 ஆக்டிவ்



ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.9,499-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் ரூ.8,499-விலையில் வாங்க முடியும். 

மேலும் ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் 6.53' இன்ச் அளவு கொண்ட எச்டி பிளஸ் 720 x 1,600
பிக்சல்கள் உடைய டாட் டிராப் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ G35 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி,பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். 



இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த்
சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ்

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.22,999-ஆக உள்ளது. ஆனால் இந்த சிறப்பு விற்பனையில் இந்த சாதனத்தை ரூ.18,999-விலையில் வாங்க முடியும். 

மேலும் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் சூப்பர் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதேபோல் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸப்ளே எச்டிஆர் 10 ஆதரவு, 5020 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்ங்கள் இவற்றுள் அடக்கம். 



இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.


Share:

12 Oct 2021

உங்க ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா., இல்லையா?- இருந்தா எப்படி அழிப்பது: இதோ வழிமுறைகள்!

 

இணைய அணுகலில் இருக்கும் அனைத்து கேஜெட்களும் வைரஸ்களால் பாதிக்கப்படுவது என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. 



கம்ப்யூட்டர்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்பட்டிருக்கும் முக்கிய தகவல்களை அணுகவும், ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்பட்டிருக்கும் வங்கி கணக்கை கையாடல் செய்து பணம் திருடவும் தீங்கிழைக்கும் மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 



தீங்கிழைக்கும் பயன்பாடுகள் மூலம் திருடப்படும் தகவல்கள் டார்க் வலைதளங்களுக்கு விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வைரஸ்களால் பாதிக்கப்படும் சாதனங்கள்



கணினிகள், ஸ்மார்ட்போன்கள் ஆகிய இரண்டும் வைரஸ்களால் பாதிக்கப்படுகிறது என்றால் அது மிகையல்ல. தீங்கிழைக்கும் பயன்பாடுகள் ஆனது விளம்பரங்கள் மற்றும் பல வடிவங்களில் வருகிறது. ஹேக்கர்கள் ரான்சம்வேரைப் பயன்படுத்தி சாதனங்களை பூட்டி வைத்து தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றனர்.

தீம்பொருள்கள் பாதிப்பு



பெரும்பாலும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் இந்த வைரஸ்கள் மற்றும் தீம்பொருளால் பாதிக்கப்படும் என நம்பப்படுகிறது. ஐபோன்களை பொறுத்தவரையில் பெரிதளவான அச்சுறுத்தல்கள் இல்லை என்றே கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வைரஸார் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வது என்பது பிரதான ஒன்றாகும்.

ஸ்மார்ட்போன்களில் ஒழிந்திருக்கும் வைரஸ்கள்



ஸ்மார்ட்போன்களில் ஒழிந்திருக்கும் வைரஸ்களை கண்டறிவது என்பது எளிதான விஷயம் இல்லை என்றாலும் இதை கண்டறிவதற்கு வழிமுறைகள் இருக்கிறது. ஏதாவது செயலி, மெசேஜ்கள் மூலம் தீம்பொருள் பயன்பாடுகள் ஊடுருவச் செய்யப்பட்டு வருகிறது. 

தீம்பொருள்களானது பல்வேறு வழிமுறைகளில் ஸ்மார்ட்போன்களில் ஊடுருவச் செய்யப்பட்டு வருகிறது. இதை எப்படி கண்டறிவது என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

தீம்பொருள் கண்டறிவது எப்படி



  • உங்கள் ஸ்மார்ட்போன் தீம்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க சில வழிமுறைகள் இருக்கின்றன.
  • சாதனங்களில் இருக்கும் வைரஸ் ஏணைய பேக்ரவுண்ட் (பின்னணி) பயன்பாடுகளை இயக்கும். இது தரவை அதிகமாக உட்கொள்ளும். பயன்படுத்தாமல் இணையம் செலவாகிறது என்றால் சற்று கவனிக்க வேண்டிய விஷயம். காரணம் இதுபோன்ற வைரஸ்கள் அடிக்கடி இணையத்துடன் தொடர்பு கொள்ளும்.
  • தீங்கிழைக்கும் செயலிகள் மற்றும் மென்பொருள் ஆனது தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதால் வேகமாக சார்ஜ் காலியாகும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சாதனம் பயன்பாட்டில் இல்லாத போதும் சூடாகவே இருந்தால் ஸ்மார்ட்போனில் பின்னணி செயல்பாடு உள்ளது என்றே அர்த்தம். அதை கவனிக்க வேண்டும்.


  • சந்தேகத்திற்கு இடமான விளம்பரங்கள் அடிக்கடி பாப் அப் செய்யும். வழக்கமாக பல தளங்களில் காணப்படுவது பாப் அப் விளம்பரம். இதுபோன்ற பெரும்பாலான விளம்பரங்களை தொடாமல் இருப்பது நல்லது. தேவையற்ற லிங்க்-களுக்குள் செல்ல வேண்டும். இது சாதனத்திற்கு நல்ல அறிகுறி கிடையாது.
  • உங்கள் ஸ்மார்ட்போனின் முகப்புத் திரையில் புதிய பயன்பாடுகள் வித்தியாசமாக தோற்றத்தில் இருக்கும். இதுபோன்ற புதிய பயன்பாடுகளில் தீம்பொருட்கள் இருக்கலாம்.
  • உங்கள் ஸ்மார்ட்போன் வழக்கத்தை விட மெதுவான செயல்திறனை வழங்கும். இவை அனைத்தும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

வைரஸால் பாதிக்கப்பட்ட சாதனத்தை எவ்வாறு சரிசெய்வது:



  • உங்கள் ஸ்மார்ட்போன் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் தங்கள் சாதனத்தை சரிசெய்ய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • சமீபத்தில் விமர்சனங்களை சரிபார்த்து. குறைந்த எண்ணிக்கையிலான பதிவிறக்கங்கள் மேற்கொள்வதோடு மோசமான விமர்சனங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.
  • உங்கள் ஸ்மார்ட்போனின் அமைப்புகளில் இருந்து தேடல்கள் மற்றும் தற்காலிக சேமிப்பை அழிக்கவும்.


  • தீங்கிழைக்கும் செயலிகள் மற்றும் மென்பொருட்களை சரியான நேரத்தில் ஸ்கேன் செய்யும் அதிகாரப்பூர்வ வைரஸ் எதிர்ப்பு பயன்பாட்டை பயன்படுத்தவும்
  • அதேபோல் சாதனத்தை அவ்வப்போது ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்வதும் நல்லது. இது பின்னணியில் ஓடும் பயன்பாட்டை தடுக்க உதவும். அவ்வப்போது சாதனத்தை ஃபேக்டரி ரீசட் செய்வது நல்லது ஆனால் இதற்கு முன்பு தங்கள் சாதனத்தில் உள்ள கோப்புகளை காப்புப் பிரதி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.


Share:

9 Oct 2021

GBWhatsApp APK Download (Updated) October 2021 Anti-Ban | OFFICIAL

 
GBWhatsApp have video call feature and many privacy feature available in the latest update for GBWhatsApp APK for android, With GBWhatsApp Plus you can use two applications (accounts) of WhatsApp Plus in same android device and More themes , increasing the number of letters in status, and the possibility to hide notifications, and the possibility to send larger video size and audio file without worry, and send e-books .and You Can set password for chats and WhatsApp Plus.



Many of WhatsApp and WhatsApp Plus users, after downloading GBWhatsApp for android , They were very happy to use two applications on the same android phone or tablet, And becuse many distinctive options such as hide last seen – hide online status when you use WhatsApp Plus, Your friends may be surprised when you talk with them and you are offline and when you use 2 GBWhatsApp (accounts same android device, We have modified properties in the app and its settings, and add the additional features you are looking for.



Many of GBWhatsApp users are very happy to use GBWhatsApp privacy features, Because it gives you the freedom to chat and reply at any time you want, Where you can control everything :

GBWhatsApp Privacy Features



Hide Online Status : You can hide the online status and use GBWhatsApp freely, And show to everyone offline (They will see the last date you were logged in).

Hide Blue Ticks : You can hide blue ticks ✔✔ for contacts and group, When you read any received messages.

Hide Second Tick : You can hide second ticks ✔ for contacts and group, When you delivered any messages.

Hide Writing Tick : You can hide writing ? for contacts and group, When you typing a message.

Hide Recording Status : You can hide recording Status for contacts and group, When you recording voice.

Hide Blue Microphone : You can hide Blue Microphone for contacts and group, When you open voice.



Hide View Status : You can hide your name when you view any status published by your friends.

Anti-Revoke : With this amazing option! you can read deleted messages , And prevent your friends from deleting messages after sending it to you, Also you can see the previous deleted messages in contact info (Click on contact name ➡ revoked messages).

Custom Privacy For Specific Contact : You can set privacy options for specific friend without apply it to other contacts (Click on contact name ➡ privacy).

GBWhatsApp Sharing Features :


GBWhatsApp has come with many of media features, Which provide comfort to the user, Where you can download any status and share anything you want :

GBWhatsApp Sharing Features

Download Status : You can save any WhatsApp status in your device, And download videos and photos from your friends.

Files & Documents : You can share any files type you want, Such as (PDF, TXT, Docs…) up to 100MB in size.



Media Auto-Download : You can turn off auto videos & photos download for specific friend without apply it to other contacts (Click on contact name ➡ media auto-download).

Camera : You can send pictures and videos without any reduction in quality and fast as possible.

Gallery :You can select and send up to 100 photos or videos at once and at the highest possible quality.

Audio : You can send audio files or music from player or file manager upto 100MB.

Location : You can share your live location (Real-time location) and let your friends track you or send your current as point on map.

Contacts : You can select and send upto 200 contacts at once, Including the numbers – emails – profile picture – address.




Comparison Whatsapp VS GBWhatsapp 

FEATURESGBWHATSAPPWHATSAPP
Status Characters LengthUp to 255 Characters
Up to 139 Characters
Document Sharing at one time100
30
Media Sharing50 MB
15 MB
Hide Last Seen
Status Copying
Documents Sharing in Pdf, Txt format
Languages Supported45130
Blank Messages Sending
Theme Changing


Share:

FACEBOOK