12 Oct 2021

உங்க ஸ்மார்ட்போனில் வைரஸ் இருக்கா., இல்லையா?- இருந்தா எப்படி அழிப்பது: இதோ வழிமுறைகள்!

 

இணைய அணுகலில் இருக்கும் அனைத்து கேஜெட்களும் வைரஸ்களால் பாதிக்கப்படுவது என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. 



கம்ப்யூட்டர்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்பட்டிருக்கும் முக்கிய தகவல்களை அணுகவும், ஸ்மார்ட்போன்களில் சேமிக்கப்பட்டிருக்கும் வங்கி கணக்கை கையாடல் செய்து பணம் திருடவும் தீங்கிழைக்கும் மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 



தீங்கிழைக்கும் பயன்பாடுகள் மூலம் திருடப்படும் தகவல்கள் டார்க் வலைதளங்களுக்கு விற்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வைரஸ்களால் பாதிக்கப்படும் சாதனங்கள்



கணினிகள், ஸ்மார்ட்போன்கள் ஆகிய இரண்டும் வைரஸ்களால் பாதிக்கப்படுகிறது என்றால் அது மிகையல்ல. தீங்கிழைக்கும் பயன்பாடுகள் ஆனது விளம்பரங்கள் மற்றும் பல வடிவங்களில் வருகிறது. ஹேக்கர்கள் ரான்சம்வேரைப் பயன்படுத்தி சாதனங்களை பூட்டி வைத்து தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றனர்.

தீம்பொருள்கள் பாதிப்பு



பெரும்பாலும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் இந்த வைரஸ்கள் மற்றும் தீம்பொருளால் பாதிக்கப்படும் என நம்பப்படுகிறது. ஐபோன்களை பொறுத்தவரையில் பெரிதளவான அச்சுறுத்தல்கள் இல்லை என்றே கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வைரஸார் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வது என்பது பிரதான ஒன்றாகும்.

ஸ்மார்ட்போன்களில் ஒழிந்திருக்கும் வைரஸ்கள்



ஸ்மார்ட்போன்களில் ஒழிந்திருக்கும் வைரஸ்களை கண்டறிவது என்பது எளிதான விஷயம் இல்லை என்றாலும் இதை கண்டறிவதற்கு வழிமுறைகள் இருக்கிறது. ஏதாவது செயலி, மெசேஜ்கள் மூலம் தீம்பொருள் பயன்பாடுகள் ஊடுருவச் செய்யப்பட்டு வருகிறது. 

தீம்பொருள்களானது பல்வேறு வழிமுறைகளில் ஸ்மார்ட்போன்களில் ஊடுருவச் செய்யப்பட்டு வருகிறது. இதை எப்படி கண்டறிவது என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

தீம்பொருள் கண்டறிவது எப்படி



  • உங்கள் ஸ்மார்ட்போன் தீம்பொருளால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க சில வழிமுறைகள் இருக்கின்றன.
  • சாதனங்களில் இருக்கும் வைரஸ் ஏணைய பேக்ரவுண்ட் (பின்னணி) பயன்பாடுகளை இயக்கும். இது தரவை அதிகமாக உட்கொள்ளும். பயன்படுத்தாமல் இணையம் செலவாகிறது என்றால் சற்று கவனிக்க வேண்டிய விஷயம். காரணம் இதுபோன்ற வைரஸ்கள் அடிக்கடி இணையத்துடன் தொடர்பு கொள்ளும்.
  • தீங்கிழைக்கும் செயலிகள் மற்றும் மென்பொருள் ஆனது தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதால் வேகமாக சார்ஜ் காலியாகும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. சாதனம் பயன்பாட்டில் இல்லாத போதும் சூடாகவே இருந்தால் ஸ்மார்ட்போனில் பின்னணி செயல்பாடு உள்ளது என்றே அர்த்தம். அதை கவனிக்க வேண்டும்.


  • சந்தேகத்திற்கு இடமான விளம்பரங்கள் அடிக்கடி பாப் அப் செய்யும். வழக்கமாக பல தளங்களில் காணப்படுவது பாப் அப் விளம்பரம். இதுபோன்ற பெரும்பாலான விளம்பரங்களை தொடாமல் இருப்பது நல்லது. தேவையற்ற லிங்க்-களுக்குள் செல்ல வேண்டும். இது சாதனத்திற்கு நல்ல அறிகுறி கிடையாது.
  • உங்கள் ஸ்மார்ட்போனின் முகப்புத் திரையில் புதிய பயன்பாடுகள் வித்தியாசமாக தோற்றத்தில் இருக்கும். இதுபோன்ற புதிய பயன்பாடுகளில் தீம்பொருட்கள் இருக்கலாம்.
  • உங்கள் ஸ்மார்ட்போன் வழக்கத்தை விட மெதுவான செயல்திறனை வழங்கும். இவை அனைத்தும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

வைரஸால் பாதிக்கப்பட்ட சாதனத்தை எவ்வாறு சரிசெய்வது:



  • உங்கள் ஸ்மார்ட்போன் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தால் தங்கள் சாதனத்தை சரிசெய்ய வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.
  • சமீபத்தில் விமர்சனங்களை சரிபார்த்து. குறைந்த எண்ணிக்கையிலான பதிவிறக்கங்கள் மேற்கொள்வதோடு மோசமான விமர்சனங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.
  • உங்கள் ஸ்மார்ட்போனின் அமைப்புகளில் இருந்து தேடல்கள் மற்றும் தற்காலிக சேமிப்பை அழிக்கவும்.


  • தீங்கிழைக்கும் செயலிகள் மற்றும் மென்பொருட்களை சரியான நேரத்தில் ஸ்கேன் செய்யும் அதிகாரப்பூர்வ வைரஸ் எதிர்ப்பு பயன்பாட்டை பயன்படுத்தவும்
  • அதேபோல் சாதனத்தை அவ்வப்போது ஸ்விட்ச் ஆஃப் செய்து ஆன் செய்வதும் நல்லது. இது பின்னணியில் ஓடும் பயன்பாட்டை தடுக்க உதவும். அவ்வப்போது சாதனத்தை ஃபேக்டரி ரீசட் செய்வது நல்லது ஆனால் இதற்கு முன்பு தங்கள் சாதனத்தில் உள்ள கோப்புகளை காப்புப் பிரதி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.


Share:

FACEBOOK