24 Aug 2021

எது? வெறும் ரூ.3,499 விலையில் ஆண்ட்ராய்டு 11 உடன் ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமா? முழு விபரம் இதோ..

 

ஜியோபோன் நெக்ஸ்ட் அடுத்த மாதம் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் விலை பற்றிய அடுத்த தகவல் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. 



இந்த முறை ஜியோபோன் நெக்ஸ்ட் எதிர்பார்த்ததை விட மிகவும் மலிவான விலையில் அறிமுகம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை யாருமே எதிர்பார்த்திடாத விலை புள்ளியில் ஜியோபோன் நெக்ஸ்ட் அறிமுகமாகும் என்று தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் இவ்வளவு கம்மி விலையில் அறிமுகமா?

பிரபல டிப்ஸ்டர் யோகேஷின் ட்வீட் படி, ஜியோபோன் நெக்ஸ்ட் இந்தியாவில் வெறும் ரூ. 3,499 என்ற மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார். இதற்கு முன்னர் வெளியான முந்தைய அறிவிப்பின் படி, புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் ரூ. 4000 என்ற விலையை விட குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த சாதனம் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பான ஓஎஸ்

ஜியோபோன் நெக்ஸ்ட் சமாதானம் ஆண்ட்ராய்டு மற்றும் ப்ளே ஸ்டோரிலிருந்து ஜியோபோன் நெக்ஸ்டுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள சிறப்பான ஓஎஸ்ஸின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான ஸ்மார்ட்ஃபோன் பயனர்களின் தனித்துவமான தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் மலிவான விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் அனுபவத்தை உருவாக்க இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் நெருக்கமாக உழைத்து ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தை உருவாகியுள்ளது.

ஜியோபோன் நெக்ஸ்ட் சிறப்பம்சம்



புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் 5.5 இன்ச் கொண்ட 720x1,440 பிக்சல்கள் உடன் கூடிய HD+ டிஸ்ப்ளேவுடன் இயங்கும் என்று கூறப்படுகிறது. இதில் 2 ஜிபி ரேம் மற்றும் 3 ஜிபி ரேம் விருப்பமும் இருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன், 4 ஜி வோல்டிஇ இணைப்புடன் 2500 எம்ஏஎச் பேட்டரியை இந்த புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனம் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. ஜியோஃபோன் நெக்ஸ்ட் ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

புதிய ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் கேமரா அம்சம்

இந்த புதிய சாதனம் ஒரு ஒற்றை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறைந்த விலை சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் 13 மெகாபிக்சல் கேமரா மற்றும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான கேமரா உடன் வருகிறது. இந்த சாதனம் குவால்காம் QM215 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது குவால்காம் அட்ரினோ 308 GPU உடன் 64-பிட், குவாட் கோர் மொபைல் செயலி உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரூ. 3,499 விலையில் மக்களுக்கான புதிய ஆண்ட்ராய்டு போன்

ஜியாபோன் நெக்ஸ்டின் விலையைப் பொறுத்தவரை, இந்த சாதனம் வெறும் ரூ. 3,499 என்ற விலைக் குறியீட்டை இலக்காகக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ இன்னும் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஜூன் மாதம் நடந்த 44 வது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் (AGM) அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது உலகின் மிகவும் மலிவான விலை கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சாதனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகமா?



இதில் ப்ளூடூத் v4.2, GPS, 1080p வரை வீடியோ பதிவு, LPDDR3 RAM மற்றும் eMMC 4.5 சேமிப்பகத்துடன் கூடிய உள்ளமைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் X5 LTE மோடம் உடன் வருகிறது. கூகுள் கேமரா கோவின் புதிய பதிப்பு தொலைப்பேசியில் Snapchat ஒருங்கிணைப்புடன் முன்பே நிறுவப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரும் செப்டம்பர் மாத துவக்கத்தில் 10 ஆம் தேதி போல் இந்த சாதனத்தை அறிமுகம் செய்யத் தயாராகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share:

FACEBOOK