9 Sept 2021

ஆப்பிள் ஐபோன் 12 வாங்க இதான் சரியான நேரம்.. இதைவிட கம்மி விலையில் கிடைக்க வாய்ப்பில்லை..

 



ஆப்பிள் ஐபோன் 12 வாங்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசையா? ஆனால், இதன் அதிக விலை உங்களைக் கவலை அடையச் செய்திருந்ததா? இது எல்லாம் இப்போது மாறப்போகிறது. 

காரணம், பிளிப்கார்ட்டில் நடைபெறும் இந்த இறுதி நாள் சலுகையில் ஆப்பிள் ஐபோன் 12 மீது நம்ப முடியாத அளவுக்கு இந்த முறை சலுகை கிடைத்துள்ளது. 

ஆப்பிள் ஐபோன் வாங்க நீண்ட நாள் காத்திருந்தவர்களுக்கு இதை விட அருமையான சலுகை இனி கிடைக்காது. ஆகையால், உடனே இந்த முழு விபரத்தையும் தெரிந்துகொண்டு ஆப்பிள் ஐபோன் 12 வாங்கத் தயார் ஆகுங்கள் மக்களே.

ஆப்பிள் ஐபோன் 12 இப்படி ஒரு மலிவான விலையில் கிடைக்குமா?



ஆப்பிள் நிறுவனம் இந்த செப்டம்பர் மாத இறுதிக்குள் தனது புதிய வரவான ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தின் விலை இந்தியாவில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

ஆப்பிள் ஐபோன் 12 சாதனம் நம்ப முடியாத தள்ளுபடி விலையில் இன்று Flipkart இல் வாங்கக் கிடைக்கிறது. இது ஒரு குறிப்பிட்ட கால விற்பனை என்பதை மறக்காதீர்கள். நீங்கள் நீண்ட காலமாக ஐபோன் 12 வாங்கக் காத்திருந்தால், இது தான் நிச்சயமாக உங்களுக்கான சிறந்த நேரம்.

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 12 மீது கிடைக்கும் தள்ளுபடி விலை எவ்வளவு?



ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தின் 64 ஜிபி ஸ்டோரேஜ், 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உள்ளிட்ட மூன்று ஸ்டோரேஜ் வேரியண்ட் வகைகளின் மீதும் இந்த சலுகை கிடைக்கிறது. 

பிளிப்கார்ட்டில், இப்போது ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தின் 64 ஜிபி மாடல் வெறும் ரூ. 66,999 என்ற குறைந்த விலையில் கிடைக்கிறது. அதேபோல், இதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ. 71,999 என்ற விலையிலும் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் இப்போது வெறும் ரூ. 81,999 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது.

இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 12 சாதனம் என்ன அசல் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது?



முதலில், ஆப்பிள் ஐபோன் 12 அடிப்படை மாடல் இந்தியச் சந்தையில் ரூ. 79,900 என்ற விலையில் 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 

ஆப்பிள் ஐபோன் 12 இன் மற்ற இரண்டு மாடல்களின் விலையைப் பற்றி பார்க்கையில், இதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை இந்தியாவில் ரூ. 84,900 ஆக அறிமுகம் செய்யப்பட்டது. 

அதேபோல், இதன் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை ரூ. 94,900 ஆக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விலைகள் ஆப்பிள் ஆன்லைன் இந்தியா ஸ்டோரில் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தின் சிறப்பம்சம்



ஆப்பிள் ஐபோன் 12 சாதனம், 6.1' இன்ச் சூப்பர் ரெடினா XDR டிஸ்ப்ளேவை 2532 x 1170 பிக்சல் தீர்மானத்துடன் கொண்டுள்ளது. இது 256 ஜிபி வரை கொண்ட இன்டெர்னல் ஸ்டோரேஜ் விருப்பத்துடன் மூன்று மாடலாக வருகிறது. 

இது IP68 மதிப்பிடப்பட்டது மற்றும் இது A14 பயோனிக் சிப்செட் மூலம் இயங்கக்கூடியது. இது டூயல் 12 மெகாபிக்சல் கேமரா அமைப்பு கொண்டுள்ளது. ஃபேஸ் ஐடி ஆதரவு மற்றும் பல பாதுகாப்பு அம்சங்களையும் வழங்குகிறது.

ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தில் என்ன எதிர்பார்க்கலாம்?



வரவிருக்கும் ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் வடிவமைப்பு, பேட்டரி ஆயுள், ஐபோன் 13 சாதனத்தின் செயல்திறன் மற்றும் கேமரா அம்சம் போன்ற முக்கிய அம்சங்கள் அடிப்படையிலேயே முந்தைய மாடலான ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தின் செயல்பாட்டை விட ஒட்டுமொத்தமாக மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் பேட்டரி பெரிதாக இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் ஐபோன் 13 சாதனத்தின் வெளியீட்டுத் தேதி எப்போது?



ஆப்பிள் ஐபோன் 12 சாதனத்தின் வாரிசான ஆப்பிள் ஐபோன் 13 வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

ஆப்பிள் நேற்று இரவு இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பை அனுப்பியுள்ளது. வரவிருக்கும் ஐபோன் மாடல்விபரங்களை நிறுவனம் வெளிப்படுத்தவில்லை, எனவே பிராண்ட் அதிகாரப்பூர்வ விவரங்களை வெளிப்படுத்தும் வரை நாம் காத்திருக்க வேண்டும். 

ஆப்பிள் நிகழ்வு திட்டமிட்ட தேதியில் இரவு 10:30 மணிக்குத் தொடங்கும், மேலும் அதை நீங்கள் ஆன்லைனில் வசதியாகப் பார்க்க முடியும்.


Share:

FACEBOOK