6 Sept 2021

ரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் இவை தான்.. மிஸ் பண்ணாதீங்க..

 

உலக நாடுகளில் உள்ள சில முன்னணி நாடுகளில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 



இந்தியாவில் 5ஜி சேவைக்கான சோதனையை சில டெலிகாம் நெட்வொர்க் நிறுவனங்கள் மும்முரமாக சோதனை செய்து வருகிறது. 

இருப்பினும் இந்தியச் சந்தையில் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட்போன்களை, ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்ய துவங்கியுள்ளது. 

பட்ஜெட் விலையில் இந்தியாவில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

ரூ. 20,000 விலைக்குள் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்கள்



இந்தியாவில் மிக விரைவில் 5ஜி அறிமுகம் செய்ய வாய்ப்புள்ள நிலையில், முன்கூட்டியே மொபைல் வாங்கும் பயனர்கள் எதிர்கால சேவையை எதிர்பார்த்து தற்போதே 5ஜி ஸ்மார்ட்போனைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இந்தியச் சந்தையில் வெறும் ரூ. 20,000 விலைக்குள் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை பற்றி தான் நாம் பார்க்கப்போகிறோம். உங்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், இத பதிவைப் படித்துவிட்டு உங்கள் தேர்வை முடிவுசெய்யுங்கள்.

ரெட்மி நோட் 10T 5ஜி (Redmi Note 10T 5G) விலை மற்றும் சிறப்பம்சம்




ரெட்மி நிறுவனம் சமீபத்தில் 5ஜி தொழில்நுட்பத்துடன் ரெட்மி நோட் 10T ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது மீடியா டெக் டைமென்ன்ஸிட்டி 700 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது 6.5 அங்குல FHD + IPS LCD பேனலை 90Hz ரெஃப்ரஷ் வீதத்துடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை நீட்டிக்கக்கூடிய ஸ்டாரேஜூடன் வருகிறது. இது 48 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன், 18W சார்ஜிங் அம்சம் கொண்ட 5,000 எம்ஏஎச் பேட்டரியை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வண்ணங்களில் ரூ. 13,999 விலை முதல் ரூ. 15,999 விலைக்குள் கிடைக்கிறது. இதன் 6GB RAM வேரியண்ட் விலை வெறும் ரூ. 15,999 ஆகும்.

போகோ எம்3 ப்ரோ 5ஜி (Poco M3 Pro 5G) விலை மற்றும் சிறப்பம்சம்




போக்கோ M3 ப்ரோ 5ஜி 6.53 இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் கொண்ட 90 Hz ரெஃப்ரஷ் விகிதத்துடன் கூடிய டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 662 சிப்செட் உடன் இயங்குகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 48 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமராவுடன் வருகிறது. இது 8 எம்பி முன்பக்க செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த போனில் விலை வெறும் ரூ.15,999 ஆகும்.

iQoo Z3 5G விலை மற்றும் சிறப்பம்சம்




நமது பட்டியலில் அடுத்து வரும் சாதனம் iQoo Z3 5G ஸ்மார்ட்போன் ஆகும். இது 6.58 இன்ச் கொண்ட புள் எச்டி பிளஸ் LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 768G சிப்செட் உடன் ஒருங்கிணைந்த அட்ரினோ 620 GPU மூலம் இயங்குகிறது. இது இரண்டு 5ஜி சிம் கார்டுகளை ஆதரிக்கும் 5ஜி ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், 16 எம்பி செல்பி கேமராவும் உள்ளது. இதன் விலை வெறும் ரூ.19,999 ஆகும்.

ரியல்மி 8 5ஜி (realme 8 5G) விலை மற்றும் சிறப்பம்சம்




பட்ஜெட் விலையில் கிடைக்கும் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் பட்டியலில் அடுத்து நாம் பார்க்க போவது ரியால்மி 8 5ஜி ஸ்மார்ட்போனாகும். இது மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்செட் மூலம் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் புள் எச்டி பிளஸ் கொண்ட 1,080 × 2,400 பிக்சல்கள் உடைய டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமராவும், 16 எம்பி செல்பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 18W பாஸ்ட் சார்ஜிங் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது 5,000mAh பேட்டரி உடன் வருகிறது. இதன் விலை ரூ.16,999 முதல் துவங்கி ரூ. 19,999 விலையில் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம் 32 5ஜி (Samsung Galaxy M32 5G) விலை மற்றும் சிறப்பம்சம்




இறுதியாக நமது பட்டியலில் உள்ள 5ஜி ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி M32 5ஜி ஆகும். இது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஎஃப்டி இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே மற்றும் 60 Hz ரெஃப்ரஷ் வீதத்துடன் வருகிறது. இது ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 720 சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது. இதில் 48 மெகாபிக்சல் கேமரா மற்றும் 20 எம்பி செல்பி கேமராவும் உள்ளது. இது 15W சார்ஜிங் அம்சத்துடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 20,999 முதல் ரூ. 22,999 வரை கிடைக்கிறது.


Share:

FACEBOOK