15 Aug 2021

Poco போனில் ஓவர்-ஹீட்டிங் சிக்கல்; சார்ஜிங், கேமிங்கின் போது ஜாக்கிரதை!

 

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Poco F3 GT மாடலை வாங்கிய சில பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தும் போது, குறிப்பாக கேமிங்கின் போது வெப்பமடையும் சிக்கல்களை சந்தித்து உள்ளனர்.



நல்ல விஷயம் என்னவென்றால் போக்கோ நிறுவனம் இதை ஒப்புக் கொண்டுள்ளது.

மேலும் போக்கோ நிறுவனம் F3 GT யூனிட்களின் மிகச் சிறிய தொகுப்பு ஹீட்டிங் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

சில Poco F3 GT பயனர்கள் இதைப் பற்றி ட்விட்டரில் புகார் செய்தனர் மற்றும் பெரும்பாலும் அந்த பயனர்கள் MIUI 12.5.4.0.RKJINXM-இல் இருக்கலாம்.

போக்கோ எஃப் 3 ஜிடி ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போதும் அல்லது கேமிங் செய்யும் போது நீங்கள் வெப்பமூட்டும் பிரச்சினைகளை எதிர்கொண்டால், நீங்கள் போக்கோவிலிருந்து ஒரு தீர்வை எதிர்பார்க்கலாம்.



வெப்பமடையும் பிரச்சினை சில மென்பொருள் கோளாறு காரணமாக இருக்கலாம் என்றும் மற்றும் போக்கோ அதை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஹீட்டிங் சிக்கலை போக்கோ ஏற்றுக்கொண்டாலும் கூட, சிக்கலைச் சரிசெய்வதற்கான தற்காலிக தீர்வு அல்லது டைம்லைன் பற்றி போக்கோ இன்னும் வாயை திறக்கவில்லை.

நினைவூட்டும் வன்ணம் போகோ எஃப் 3 ஜிடி சமீபத்தில் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 1200 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது ரூ.26,999 முதல் வாங்க கிடைக்கிறது.

போகோ எஃப் 3 ஜிடி ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் வகைகளில் வருகிறது. பேஸிக் மாடல் 6GB+128GB ஆகும், இதன் விலை ரூ .26,999. மறுகையில் உள்ள 8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கிறது.
Share:

FACEBOOK